திருகோணமலை இந்தியாவிற்கு!

 
திருகோணமலை எண்ணெய் தாங்கி பண்ணையில் லங்கா இந்தியன் எண்ணெய்க் கம்பனியால் (LIOC) தற்போது நடத்தப்படும் எண்ணெய் தாங்கிகள் மேலும் 50 வருடங்களுக்கு LIOC க்கு குத்தகைக்கு வழங்கப்படவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (31) அவர் இதனை அறிவித்துள்ளார்.

புதிதாக நிறுவப்பட்ட டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிடெட் உடன் LIOC இணைந்து கூடுதலாக 61 தாங்கிகளை உருவாக்குவது என்றும், 51% பங்குகள் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடனும் 49% பங்குகள் LIOC க்கும் இருக்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

No comments