பஸிலை நம்பும் வாசுதேவ!

சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் கொடுக்கல் வாங்கல் செய்தால் அரசாங்கத்தில் தான் இருக்கப்போவதில்லை என  கூறியதன் மூலம் தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திற்கு ஒருபோதும் செல்லாது என நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ தெளிவுபடுத்தியுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும், ஆனால் கூட்டுப் பொறுப்பில் சிக்கல் இருந்தால் அதற்குத் தீர்வு காண வேண்டும். தெரியாமல் அமைச்சரவைத் தீர்மானம் எடுத்தாலும், தெரியாமல் கூட்டுப் பொறுப்பு வரலாம். 

வாக்களிக்க வாய்ப்பு கிடைத்தால் இன்று கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிப்போம். என்று வாசுதேவ கூறியுள்ளார். 

பசில் ராஜபக்ஷவின் குடும்பம் அமெரிக்காவில் இருப்பதால் அவர் அங்கு சென்றுள்ளதாகவும் குடும்பத்தைப் பார்க்க செல்லத்தானே வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

No comments