முன்னணி - தமிழரசு கூட்டினால் காரைநகரில் கதகதப்பு!

 


முன்னணி - தமிழரசு கூட்டினால் மற்றுமொரு சபையின் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது காரைநகர் பிரதேச சபை கடந்த 10ஆம் திகதி ஆட்சி அமைத்த நிலையில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட 2022ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம் தோல்வி அடைந்தது. 

11 உறுப்பினர்களை மட்டுமே கொண்ட காரைநகர்ப் பிரதேச சபையில் த.தே.கூட்டமைப்பு மற்றும் சுயேச்சைக் குழு என்பன தலா 3 உறுப்பினர்களைக் கொண்டிருந்த நிலையில் 2018ஆம் கூட்டமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. இதன்போது தேர்வான தவிசாளர் இந்த ஆண்டு மரணமடைந்தமையினால் கடந்த 10ஆம் திகதி மீண்டும் தவிசாளர் தேர்வு இடம்பெற்ற சமயம் தவிசாளர் பதவி சுயேச்சைக் குழுவின் வசமானது. இந்த தேர்வில் சுயேச்சைக் குழுவிற்கு ஈ.பீ.டீ.பி ஆதரவு வழங்கியது. 

இந்த நிலையில் இன்று புதிய தவிசாளர் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தபோது சுயேட்சைக் குழுவுடன் இணைந்து ஈ.பீ.டீ.பியுமாக ஐவர் ஆதரவாக வாக்களித்தனர். இருந்தபோதும் த.தே.கூட்டமைப்புடன் இணைந்து ஐ.தே.கட்சி மற்றும் முன்னணி ஆகியன இணைந்து 6  வாக்குகள் எதிராக வாக்களித்தமையினால் வரவு செலவுத் திட்டம் தோல்வி அடைந்தது.

No comments