உலங்கு வானூர்தி விபத்து! இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மரணம்!

தென்னிந்தியாவின் தமிழ் நாட்டில் உலங்கு வானூர்தி விபத்தில் இந்தியாவின் உயர்மட்ட இராணுவத் தளபதி உயிரிழந்துள்ளதாக விமானப்படை தெரிவித்துள்ளது.

குன்னூர் அருகே மலைப்பகுதியில் எம்ஐ-17வி5 உலங்கு வானூர்தி விழுந்து விபத்துக்குள்ளானதில் முப்படைகளின்  தளபதி ஜெனரல் பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் 11 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

63 வயதான ஜெனரல் ராவத், 2019 ஜனவரியில் இந்தியாவின் முதல் பாதுகாப்புப் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

விபத்து குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.  

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை பாதுகாப்பு குழு அவசர கூட்டத்தை நடத்த உள்ளது.

இவர்கள் அனைவரும் மரணமடைந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

  

No comments