யாழில் மாலை:தெற்கில் துரத்தியடிப்பு!சீன தூதரிற்கு யாழ்ப்பாணத்தில் ஆலவட்டங்கள் சகிதம் வரவேற்பு வழஙக்கப்படுகையில் சீன உர கப்பலுக்கு கட்டணம் செலுத்தக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சீனாவின் உர கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இன்று கட்சித் தலைமையகத்தில் கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனை தெரிவித்துள்ளார். 

தற்போது நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி உள்ள நிலையில், சீன உர கப்பலுக்கு கட்டணம் செலுத்துவது ஒருபோதும் அனுமதியளிக்க முடியாது எனவும் மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது நிபுணர்கள் எவரேனும் அது குறித்து ஆராய்ந்த பின்னரே உரத்தை நாட்டிற்கு கொண்டுவர தீர்மானித்திருப்பார்கள். எனவே, அவர்கள் குறித்து ஆராய்ந்து அவர்களுக்கும் தண்டனை வழங்க வேண்டும் என மைத்திரிபால சிறிசேன கூறினார்.

No comments