இந்து மதகுரு படுகொலை:சந்தேகநபர் கைது!கடந்த ஜூலை மாதம் கதிர்காமம் நாகஹா வீதியில் இந்து மதகுரு ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல குற்றங்களில் தேடப்பட்டுவந்த  பல குற்றங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நபர் ஒருவரை சுமார் 8 வருடங்களின் பின்னர் யால பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் தலைமறைவாகியிருந்தபோது கதிர்காமம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கதிர்காமம் பொலிஸாரால் பல நாட்களாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் யால வனப்பகுதியில் மறைந்திருந்து கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களைச் மேற்கொண்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த சந்தேகநபர் நபர் வனவிலங்குகளை வேட்டையாடி பாரியளவில் சட்டவிரோதமாக இறைச்சி வியாபாரம் செய்துள்ளார் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


கடந்த ஜூலை மாதம் கதிர்காமம் நாகஹா வீதியில் இந்து மதகுரு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபராகவும் குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

No comments