புறோக்கர்களை நம்பி நடுத்தெருவில் தமிழ் மக்கள்!

 


தமிழ் கட்சிகளிற்கு மட்டும் வாக்களிப்போமென தெரிவித்து வடகிழக்கு தமிழ் மக்கள் வெறுமனே தரகர்களை மட்டுமே உருவாக்கியிருக்கிறார்கள்.

கடந்த தேர்தல்களில் ஒரு சாரார் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வாக்களித்தனர்.அவரோ அதனை ஜனாதிபதி கோத்தபாயவிற்கு தாரைவார்த்து விற்றுவிட்டார்.

இன்னொரு சாரார் அங்கயன் இராமநாதனிற்கு வாக்களித்தனர். அவரும் அதனை ஜனாதிபதி கோத்தபாயவிற்கு தாரை வார்த்து விற்றுவிட்டார்.

இன்னும் சிலரோ கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரனிற்கு வாக்களித்தனர்.அவர் ரணிலுக்கும் தற்போது சஜித்திற்கும் அதனை விற்றுவருகின்றார்.

இவ்வாறு தரகர்கள்,புறோக்கர்கள் ஊடாக தெற்கிற்கு தாரை வார்ப்பதை விடுத்து தற்போது தெற்கில் பலம் வாய்ந்த மாற்று சக்தியாக பரிணமித்துள்ள தேசிய மக்கள் சக்தியை தெரிவு செய்வதன் மூலம் தமிழ் மக்கள் நல்லதொரு விடிவை பெறமுடியுமென தெரிவித்துள்ளார் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான சந்திரசேகரன்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி கோத்தபாய மக்களது ஆதரவை மிகவேகமாக இழந்துவருகின்றார்.அவர் அவ்வாறு மக்கள் ஆதரவை இழக்கின்ற போது மறுபுறம் தனது ஆதரவை பலப்படுத்த வேண்டிய சஜித்  பிறேமதாசாவோ தானும் அதே போன்று வீழ்ந்து கிடக்கின்றார்.

இந்நிலையில் தேசிய மக்கள் சக்தியே தற்பேர்து தன்னை பலப்படுத்தி மிகப்பெரிய சக்தியாக வளர்ந்துவருகின்றது.

சர்வதேச நாட்டு தூதர்கள் மற்றும் இராஜதந்திரிகள் தற்போது படையெடுத்து வந்து தேசிய மக்கள் சக்தியை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவதாகவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் தேசிய மக்கள் சக்தியின் வளர்ச்சியை அவர்கள் புரிந்து கொண்டுள்ளமை தெரிகிறது.

இதனிடையே அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விமல் வீரவன்சவை  ஜனாதிபதி முதல் பொதுஜனபெரமுனவை சேர்ந்த அனைவரும் வெளியே போகச்சொல்கின்றனர்.

மறும் மக்கள் விடுதலை முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் விமல் வீரவன்சவை தாய்கட்சிக்கு வருகை தர அழைப்புவிடுக்கின்றரே என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் எதிரிகளுடன் தேவையாயின் பேச்சு நடத்த கூட தயாராக இருப்பதாக தெரிவித்த சந்திரசேகரன் ஆனால் துரோகிகளான  விமல் வீரவன்ச போன்றவர்களுடன் பேசக்கூட தயாரில்லையென தெரிவித்திருந்தார்.

இத்தகைய துரோகிகளை மன்னிக்க கூட மக்கள் விடுதலை முன்னணி தயராகவில்லையெனவும் மேலும் தெரிவித்திருந்தார்.

இத்தகைய துரோகிகள் ராஜபக்ச கூடாரத்தினுள் அலைந்து திரிந்தே அரசியலின்றி இல்லாதொழிந்து போவார்கள் எனவும் சந்திரசேகரன் மேலும் தெரிவித்தார்.


No comments