சட்டம் சட்டைப்பையினுள்!



தென்னிலங்கையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த அசாத் சாலியின் வழக்கு தீர்ப்பானது, சட்டம் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளது என்பதை எடுத்துக்காட்டும் சிறந்ததொரு உதாரணமாகுமென சுதந்திர ஊடக இயக்கம் தெரிவித்துள்ளது.

தான் வெளியிட்ட கூற்று தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற நடவடிக்கைகள் முடியும் வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அசாத் சாலி, சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இது அரசியல் அதிகார பலம்வாய்ந்தவர்கள் சட்டத்தைத் துஸ்பிரயோகம் செய்யும் செயற்பாட்டின் ஒரு நிகழ்வாகும் எனச் சுதந்திர ஊடக இயக்கம் கருதுகின்றது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மேற்கோள்காட்டி  தடுப்புக்காவலில் இருந்த அசாத் சாலியின் மீது நீதிமன்றத்தில் முன்  குற்றஞ்சாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் பிணை வழங்கப்படாத காரணத்தினால் கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் அவர் சிறையில் இருக்க வேண்டியதாயிற்று. கடந்த காலங்களில் பல சமூக ஆர்வலர்கள், கலைஞர்கள் மற்றும் சமூக செயற்பட்டாளர்களை அரசியல் அதிகாரங்களின் சட்ட சீர்கேடுகள் அல்லது சட்ட துஸ்பிரயோகம் காரணமாகச் அநீதியான வகையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள்குறித்த சமூகத்தின் மத்தியில் காணப்படும் கருத்துக்கள் தொடர்பில் அரசு தனது கவனத்தை செலுத்தவில்லை .

அசாத் சாலி கைது செய்யப்பட்ட சந்தர்பத்தில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஊடகங்களுக்கு வழங்கிய கருத்துக்களில் அசாத் சாலியின் கைது நடவடிக்கையை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி கருத்து தெரிவித்திருந்தார். அனைத்து சம்பவங்களையும் கூர்ந்து அவதானிக்கும்போது, அரசியல் அதிகாரத்திற்காக எந்த வித தயக்கமோ கூச்சமோ இன்றிசட்டத்தை துஸ்பிரயோகம் செய்ய இந்நாட்டு அரசியல் பலம்வாய்ந்தவர்கள் முனைகின்றமை தெட்டத்தெளிவாககே கண்டுகொள்ளமுடியுமாக உள்ளது.

 இதுபோன்ற நிகழ்வுகளின் வளர்ச்சிப்போக்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தலாகவும் மற்றும் கருத்துச்சுதந்திரத்திற்கு சவாலாகவும் அமைய கூடும் என சுதந்திர ஊடக இயக்கம் கருதுகின்றதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments