மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்


சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகள் மற்றும் மத அமைப்புகள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஏற்பட்டில் ஆர்ப்பாட்டமொன்று இன்றைய தினம் மட்டக்களப்பு காந்திப் பூங்கா முன்றலில் முன்னெடுக்கப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியற் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்தது கொண்டிருந்தனர்.

இதன் போது, ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகள் எங்கே ?, புலனாய்வாளர்களைக் கொண்டு எம் மக்களை அச்சுறுத்தாதே, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்., சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அரசைப் பாரப்படுத்து, அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய் போன்ற கோசங்களோடு, இலங்கை அரசே உம்மிடம் கையளித்த எமது உறவுகள் எங்கே?, சர்வதேசமே இலங்கை அரசுக்குத் துணை போகாதே, இலங்கை அரசே எமது உணர்வுகளுக்கு மதிப்பளி, ஐநா வே ஓஎம்பியை எம் மீது திணிக்க இலங்கை அரசுக்குத் துணை போகதே போன்ற வாசகங்களை எந்தியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments