ஓய்வெடுக்கிறார் சாம்?தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை பதவியிலிருந்து இரா.சம்பந்தன் விலகவுள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ள நிலையில் அதனை கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்கள் மறுதலித்துவருகின்றனர்.

எனினும் கூட்டமைப்பை தொடர்ந்தும் தக்கவைக்க இரா.சம்பந்தனின் தலைமைக்கு பின்னர் கூட்டுத் தலைமை ஒன்றின் அவசியம் தேவையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரா. சம்பந்தன், உடல் நல பாதிப்பால் தொடர்ச்சியாக மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் நிலையில்;, மருத்துவர்களின் ஆலோசனையின் பிரகாரம் பதவி விலகும் முடிவை எடுக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு பின்னர், கூட்டமைப்புக்கு தலைமையேற்க, அத்துடன் கட்சியை ஒற்றுமைப்படுத்திக் கொண்டு செல்ல தற்போதைய நிலையில் ஆளுமையை தேடுவதைக் காட்டிலும் கூட்டுத்தலைமையே பொருத்தமானது .

இதன் மூலமே கூட்டமைப்பில் உள்ள மூன்று கட்சிகளும் இணைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கான வலிமையான பேரம் பேசும் சக்தியாக நிலைத்திருக்கமுடியும் என இரண்டாம் கட்ட தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.


No comments