கஞ்சா:ஏகவிநியோகஸ்தர்களாக காவல்துறை!
யாழ்ப்பாணத்தில் பிரபல கஞ்சா விற்பனையாளர்களாக இலங்கைகாவல்துறையினர் மாறி வருகின்றனர்.

இந்நிலையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு சட்ட நடவடிக்கைக்காக கையளிக்கப்பட்ட கேரளாக் கஞ்சாவை களவாடிய இளவாலை காவல்; நிலைய உப பரிசோதகர் ஒருவர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படடுள்ளார். 

மாதகல் கடற்பரப்பில் இந்த மாதம் 6ஆம் திகதி கடற்படையினரால் ஒரு தொகுதி கஞ்சா கடலில்  மீட்கப்பட்டது. இவ்வாறு மீட்கப்பட்ட கஞ்சா இளவாலை காவல்துறையினரிடம் சட்ட நடவடிக்கைக்காக கடற்படையினரால் கையளிக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு கையளிக்கப்பட்ட கஞ்சா தொடர்பில் நீதிமன்றிற்கு அறிக்கை சமர்ப்பித்து சான்றுப் பொருளாக கஞ்சாவை ஒப்படைத்த சமயம் கஞ்சாவில் ஒரு பகுதியினை குறித்த காவல்துறை உப பரிசோதகர் கையாடல் செய்துள்ளார்.

இதனையடுத்து உப பரிசோதகர் கடந்த 17 ஆம் திகதி முதல் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

முன்னரும் இளவாலை காவல்துறையினர் சான்று பொருளான கஞ்சாவை கையாடல் செய்த பல சம்பவங்கள் அரங்கேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments