வடகொரியாவில் 11 நாட்கள் சிரிக்கத் தடை


வடகொரியாவின்  அவர்களின் தற்போதைய அதிபர்  கிம் ஜோங் உன் தந்தை கிம் ஜோங் இல் கடந்த 2011 ஆம் ஆண்டு இதே நாளில் மரணம் அடைந்தார்.

இதனால் வடகொரிய நாட்டு மக்கள் அடுத்த 11 நாட்களுக்கு சிரிக்கக்கூடாது, மது அருந்தக்கூடாது, பிறந்தநாள் விழாக்களை கொண்டாடக்கூடாது என வடகொரிய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கடந்த காலத்தில், துக்க காலத்தில் குடித்துவிட்டுபோதையில் பிடிபட்ட பலர்

கைது செய்யப்பட்டு குற்றவாளிகளாக நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும் கைது செய்து அழைத்து செல்லப்பட்ட யாரும் இதுவரை திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது.

கிம் ஜோங் இல்  இறந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் இதே நடைமுறை வடகொரியாவில்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது.  ஒவ்வொரு ஆண்டும்  இந்த துக்கம் 10 நாட்களுக்கு கடைபிடிக்கப்படும்.  ஆனால்  இது கிம் ஜோங் இல் இறந்து 10 - வது நினைவு ஆண்டு என்பதால் இந்த ஆண்டு 11 நாட்கள் துக்கம் கடைபிடிக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த துக்க அனுசரிப்பின் போது பொதுமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் இருக்கும் பகுதியில் உள்ள பிச்சைக்காரர்களுக்கு உணவளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

No comments