ஞானசாரரை கௌரவப்படுத்திய முஸ்லீம்கள்?இலங்கையின் தீவீர முஸ்லீம் எதிர்பாளரும் இனவாதியாக அடையாளப்படுத்தப்பட்ட ஞானசார தேரரிற்கு ஆயிரக்கணக்கில் திரண்டு தமது விசுவாசத்தை வெளிப்படுத்தியுள்ளது இலங்கை முஸ்லீம் சமூகம்.

கல்முனை கடற்கரை பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹா விற்கு விஜயம் செய்த ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ செயலணியின் தலைவர் கலபொடவத்த ஞானசார தேரோ மற்றும் செயலணியினரை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வரவேற்கும் காட்சிகள் சிங்கள ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.

இவ் விஜயத்தின் போது இவ்வாறான முஸ்லிம்களின் பாரம்பரிய இடங்களையும். நிகழ்வுகளையும் பற்றி தெரிந்து கொண்டதுடன் அவற்றை தேசிய மட்டத்திலான நிகழ்வுகளில் ஒன்றாக கூட்டிணைப்பு செய்ய தான் அரசாங்கத்திற்கு ஆலோசனை முன்மொழிவதாக கலபொடவத்த ஞானசார தேரோ பொருந்திக் கொண்டதாக முஸ்லீம் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
No comments