மகிந்தவிற்கு வீட்டிற்கு போகும் திட்டமில்லை!இலங்கை எவ்வளவு நெருக்கடியானநிலைக்கு தள்ளப்பட்டாலும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ நாட்டு மக்களை விட்டுச் செல்லமாட்டார் என்றும் மக்களின் பிரச்சினைகளிற்குதீர்வை காணும் சக்தி அவரிடம் உள்ளது என்றும் தான் நம்புவதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் துன்ப நிலைமையைப் புரிந்து கொள்ளும் பக்குவம் மகிந்த விடம் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் நன்றாக ஆராய்ந்து பார்தோம் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ மனத்தில் பதவி விலகுவதற்காக அவ்வாறான ஒரு தீர்மானம் இல்லை என்றும் தற்போது கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் ஜனாதிபதியாக ஆசைப் படுகிறார்கள் இது தான் உண்மை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மக்களை முட்டாள்களாக்க முடியாது என்றும் பொதுமக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும் எல் லாவற்றையும் புரிந்துகொள்வார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிடிய அபயராம விகாரையில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், 2022 ஆம் ஆண்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்தி அடிப் படையற்றது என தெரிவித்துள்ளார்.

மேலும் அரசாங்கத்தின் பதவி காலம் நிறைவு பெறும் வரை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகமாட்டார் என்றும் அதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்றும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்தார்.

No comments