தமிழ்மொழி புறக்கணிப்பு! ஆளுநர் கூட்டத்திலிருந்து சிறீதரன் வெளிநடப்பு!


வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராசா தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற அபிவிருத்தி சார்ந்த கூட்டத்தில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

தமக்கான மொழி பெயர்ப்பாளர் ஒருவர் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கும் மேலாக அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 இந்நிலையில் தாம் அந்த கூட்டத்தில் இருந்து இடைநடுவே வெளியேறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

No comments