முடங்கியது ஏ-9 மற்றும் யாழ்.மாவட்ட செயலகம்!இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலை கண்டித்து கடற்றொழிலாளர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டத்தால் ஏ-9வீதியினூடான போக்குவரத்து இன்று காலை முடங்கியது.அதேவேளை யாழ் மாவட்ட செயலகமும் முற்றுகையிடும் போராட்டத்தினால் முடங்கியது.

அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய்ய வேண்டும். அவர்களை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக்கூடாதென சம்மேளன தலைவர் அன்னராசா நேற்றைய தினம் அறிவித்திருந்ததுடன் தமது கோரிக்கையினை வலியுறுத்தி யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தை முற்றுகையிடவுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.

தமது போராட்டத்தை  இந்தியாவுக்கு எதிரானதோ தமிழ்நாட்டிற்கு எதிரானதோ இல்லையெனவும் அன்னராசா தெரிவித்திருந்தார்.

 
No comments