வன்னிவேளாங்குளத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்




வன்னிவிளாங்குளம் துயிலும் இல்லத்திலும் மாவீரர்களுக்கு விளக்கேற்றி மக்களால் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

வன்னிவிளான்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் காவல்துறையினரின் தடைகளுக்கு மத்தியில் இரு இடங்களில் அஞ்சலி இடம்பெற்றது.

கொவிட் நிலையை காரணங்காட்டி 50பேரை மாத்திரம் உள்ளே அனுமதித்துவிட்டு ஐம்பது மீற்றருக்கு அப்பால் பின்னர் வந்தவர்களை தடுத்து நிறுத்திய பொலிசார் முதலில் சென்றவர்கள் தீபமேற்றிவிட்டு வெளியேறிய பின் மீண்டும் ஐம்பது பேரை அனுப்புவதாக கூறினர்.

எனினும் 06.05 மணிக்கே நாங்கள் அனைவரும் ஒன்றாகவே தீபமேற்ற வேண்டும் என்று கோரியபோதும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. அத்துடன் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டனர்.

No comments