கொட்டடும் மழை நடுவே மாவீரர்களுக்கு வைகோ புகழ்வணக்கம்

தமிழீழ தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு, இன்று 27.11.2021 காலை 7 மணி அளவில், மறுமலர்ச்சி தி.மு.க. தலைமை நிலையம் தாயகத்தில், 

பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், கொட்டும் மழைக்கு இடையே சுடர் ஏற்றி வைத்து, தமிழ் ஈழப் போரில் தங்கள் உயிர்களை ஈகம் தந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார். இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.இராசேந்திரன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத் புகாரி மற்றும் எழும்பூர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் பங்கேற்று மாவீர்ர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தினர்.

No comments