யேர்மனியில் நினைவுகூரப்பட்ட சுப. தமிழ்ச்செல்வன் உட்பட்ட 7 மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு

யேர்மனி போகும் நகரத்தில் நடைபெற்ற பிரிகேடியர் சுப. தமிழ்ச்செல்வன் உட்பட்ட 7 மாவீரர்களின் நினைவு வணக்க நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

சிறீலங்கா அரச பயங்கரவாதத்தால் 2007 கார்த்திகை 02 அன்று காலை 6 மணியளவில் சிறிலங்கா வான் படையின் குண்டு வீச்சுத் தாக்குதலில் வீரச்சாவடைந்த தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 போராளிகளின் 14ம் ஆண்டு நினைவேந்தல் யேர்மனி போகும் நகரத்தில் இன்று நினைவுகூரப்பட்டது. 

இந்தநிகழ்வில் போகும் நகரமக்களும் அந்த நகரத்தின் அருகில் உள்ள மக்களும் கலந்துகொண்டு மாவீரர்களுக்கு தீபம் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.

No comments