இலங்கை :காய்கறியும் இல்லை!இலங்கையில் பொருளாதார மையங்களுக்கு காய்கறி வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர். பேலியகொட, மெனிங் சந்தைக்கான மரக்கறி வரத்து சுமார் 60 வீதத்தால் குறைந்துள்ளது. 

இதற்கு உர நெருக்கடியே  முக்கியக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், காய்கறிகளின் கையிருப்பு தொடர்ந்து சரிந்தால், காய்கறிகளை வாங்க வரிசையில் நிற்கும் நிலை ஏற்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மரக்கறி கையிருப்பு குறைவினால் மரக்கறிகளின் மொத்த விலையும் அதிகரித்துள்ளதாக மெனிங் தொழிற்சங்கத்தின் தலைவர் எச்.எம்.உபாசேன தெரிவித்தார்.

No comments