சுழிபுரத்தில் மாணவன் கிணற்றில் வீழ்ந்து உயிரிழப்பு!!


யாழ்ப்பாணம் சுழிபுரம் பகுதியில் தனது நண்பர்களுடன் கிணற்றில் நீராடச் சென்ற 18 வயதுடைய மாணவன் ஒருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த மாணவன் மூளாயை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் ரஜீவன் என்ற மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

பாடசாலைக்கு சிரமதானம் செய்யப்போவதாக கூறிவிட்டுச் சென்ற குறித்த மாணவன், நேற்று சனிக்கிழமை மாலை தனது நண்பர்களுடன் சுழிபுரம் திக்கரைப் பகுதியிலுள்ள அமைந்துள்ள கிணற்றில் நீராடிய வேளையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நீரில் மூழ்கிய மாணவன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மூளாய் வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் பின்னர் மாணவன் அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.


No comments