தீபாவளி!! 28 இலட்சம் பணம் மற்றும் ஆபரங்கள் கொள்ளை!!


தீபாவளிக்கு வீட்டை பூட்டிவிட்டு ஆலையத்துக்கு சென்று வழிபட்டுவிட்டு வீடுதிரும்பிய போது பூட்டியவீட்டை கொள்ளையர்கள் உடைத்து அங்கிருந்த பணம் மற்றும் தங்க ஆபரணங்கள், உட்பட 28 இலச்சம் ரூபா பெறுமதியானவற்றை கொள்ளையிட்ட சம்பவம் நேற்று வியாழக்கிழமை (04) மட்டு. ஏறாவூர் காவல்நிலையப் பிரிவிலுள்ள மைலம்பாவெளி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மைலம்பாவெளி பிரதான வீதியிலுள்ள குறித்த வீட்டின் உரிமையாள் உட்பட 4 பேர் வசித்துவந்துள்ள நிலையில் சம்பவதினமான தீபாவளி தினத்தையிட்டு காலை 11 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு பிள்ளைகளுடன் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு மதியம் 1 மணி அளவில் வீடுதிரும்பிய போது பூட்டியிருந்த வீட்டின் முன்கதவு மற்றும் அறை கதவு உடைத்து அறையில் இருந்த அலுமாரியை உடைத்து அங்கிருந்த 6 இலச்சம் ரூபா பணம் மற்றும் 22 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது.

இதனை அடுத்து காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் தடவியல் பிரிவு காவல்துறையினரை வரவழைத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

No comments