மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்குள் சட்டவிரோதமாக நுழைந்த மியான்மரிகள் கைது


மலேசியாவிலிருந்து தெற்கு தாய்லாந்தின் Chana மாவட்டத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக 24 மியான்மர் குடியேறிகளும் 

Sadao மாவட்டத்தில் 4 மியான்மர் குடியேறிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட குடியேறிகள் குழுவினர் மழையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள சுடுகாடு அருகே இருந்த காட்டுப்பகுதியில் முகாமிட்டு தங்கியுள்ளதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து தாய்லாந்து காவல்துறையினர் தேடுதல் நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றனர். அப்போது அங்கிருந்த 24 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர்.


மலேசியாவிலிருந்து தாய்லாந்துக்குள் காடு வழியாக 5 லிருந்து 7 பேர் கொண்ட குழுவாக பிரிந்து வந்ததாக விசாரணையில் குடியேறிகள் தெரிவித்திருக்கின்றனர். 

மியான்மரில் நிலவும் வறுமையான சூழல் காரணமாக மலேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஆட்கடத்தல் முகவர்கள் வாயிலாக மியான்மரிகள் வேலைக்கு செல்வது தொடர் நிகழ்வாக உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. 

No comments