சீன கழிவு உரம்:ஓய்ந்தபாடாகவில்லை!தமது நிறுவனத்திற்கு கிடைத்த விற்பனை ஆணைக்கு அமைவான சேதனப் பசளை தொகைக்கு இலங்கை மக்கள் வழங்கி வெளியிட்ட கடன் பத்திரத்திற்கான பணத்தை செலுத்தி விட்டதாக சீனாவின் Qingdao Seawin Biotech Group Company Ltd நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால், இலங்கை மக்கள் வங்கி புதிய நிபந்தனைகளை அறிமுகப்படுத்த முடியாது என சீன நிறுவனத்தின் பணிப்பாளர் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.

தமது நிறுவனம் சீனாவின் பிரதான பசளை நிறுவனத்தின் விலை மனு நடைமுறைகளுக்கு அமைய பசளை தொகையை பெற்றுக்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பசளையின் தரம் சம்பந்தமாக பிரச்சினை இருந்தால், இரண்டு தரப்பினரும் கையெழுத்திட்டுள்ள உடன்படிக்கையை அமைய சிக்கலை நட்பான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும்.

எனினும் இதனை அடிப்படையாக கொண்டு பணம் செலுத்துவதை இடைநிறுத்த மக்கள் வங்கிக்கு எந்த உரிமையுமில்லை எனவும் பசளைக்கான பணத்தை மக்கள் வங்கி உடனடியாக செலுத்த வேண்டும் எனவும் Qingdao Seawin Biotech Group Company Ltd குறிப்பிட்டுள்ளது.

No comments