முல்லைத்தீவில் நினைவேந்தல்! பீற்றர் இளைஞ்செழியன் கைது


முல்லைத்தீவு கடற்கரையிலே சுடர் ஏற்றுவதற்காக தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் வாலிபர் முன்னணி பொருளாளருமான பீற்றர் இளஞ்செழியன் அவரது மனைவி மற்றும் பலரும் சுடர் ஏற்றுவதாக சென்ற போது முல்லைத்தீவு கடற்கரையில் வைத்து பீற்றர் இளஞ்செழியனையும் அவரது மனைவி கிந்துஜாவும் காவல்துறையினர் கைது செய்ய இழுபறிப்பட்ட நிலையில் இறுதியில் பீற்றர் இளஞ்செழியனை காவல்துறையினரின் வாகனத்தில் இழுத்து ஏற்றி கைது செய்யப்பட்டிருந்தார். 

பீற்றர் இளஞ்செழியனின் மனைவி கிந்துஜா வீதியில் அப்படியே ஆத்திரத்தில் அமர்ந்திருந்தார். சம்பவத்தையடுத்து பெருமளவு காவல்துறையினரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டனர்.

ஆத்திரமடைந்த கிந்துஜா விளக்கேற்றுவதற்கான சுடர்கள், மலர்களை கடற்கரைக்கு நோக்கி செல்ல  பொதுமக்களும் சென்று பொதுச் சுடர் ஏற்றி அதனை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட பீற்றர் இளஞ்செழியன் சற்று முன்னர் காவல்துறையினரின் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

No comments