வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் மாவீரர் நாள் நினைவேந்தல்

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் மாவீரர்தின நிகழ்வுகள் உணர்வெழுச்சியுடன் அனுஸ்டிக்கபட்டது.

மாலை 6.05 மணிக்கு அகவணக்கம் செலுத்தபட்டு பிரதான ஈகைசுடர் ஏற்றிவைக்கபட்டது.

மாவீரரின் தந்தை ஒருவரால் பிரதான ஈகை சுடர் ஏற்றி வைக்கபட்டது. அதனை தொடர்ந்து ஏனைய சுடர்கள் ஏற்றப்பட்டது.

மகாறம்பைக்குளம் பகுதியில் பிரத்தியேகமான இடம் ஒன்றில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பலர் கலந்து கொண்டு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

No comments