கிளிநொச்சி பாடசாலைகளிற்கும் பூட்டு!இலங்கையில் பெய்து கொண்டிருக்கும் அடை மழை காரணமாக நாளையிலிருந்து மறு அறிவித்தல் வரும் வரைக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.

காலநிலை காரணமாக கிளிநொச்சி பாடசாலைகளுக்கு நாளை (10) விடுமுறை வழங்கப்படுவதுடன் காலநிலையை பொறுத்தே விடுமுறை நீடிப்பது பற்றி தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே யாழ்.மாவட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments