உறவா பகையோ:சீனாவேமுடிவெடுக்கட்டும்!சர்ச்சைக்குரிய கரிம உர விவகாரம் தொடர்பில் சீன உர நிறுவனம் 8 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்குமாறு கோரியமை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், சுதந்திரமான நீதித்துறை சார்பற்ற தீர்ப்பை வழங்கினால் சீனாவுடனான இலங்கையின் உறவு நிலைத்திருக்கும் என தெரிவித்தார்.

ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

“இந்த வழக்கை சீன அரசு தாக்கல் செய்யவில்லை. இது ஒரு சீன நிறுவனத்தால் தாக்கல் செய்யப்பட்டது, அதைச் செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு. சுதந்திரமான நீதித்துறை வழக்கை விசாரித்து, நடுநிலையான தீர்ப்பை வழங்கினால், சர்வதேச உறவுகள் சிதைந்துவிடாது. சீனாவுடனான எமது சர்வதேச உறவுகள் மேலும் பலப்படுத்தப்படும்” என பேராசிரியர் பீரிஸ் தெரிவித்தார் .

No comments