மக்கள் விரட்டவில்லையென்கிறார் அங்கயன்!காரைநகரிற்கு சென்ற தன்னை மக்கள் “விரட்டியடிக்கவில்லையென அங்கயன் இராமநாதன் மறுதலித்துள்ளார்.

தமிழ் மண்ணில் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தனது ஆக்கிரமிப்பு குழுவுடன் அங்கஜன் இராமநாதன் சகிதம் கடந்த 05ம் திகதியன்று காரைநகர் வேரம்பிட்டி கிராமத்திற்கு விஜயம் செய்திருந்தார்.

அங்குள்ள தொல்லியல் விடயங்களை பார்வையிட்டு அவை தொடர்பில் மக்களை சந்திப்பதற்கான விஜயமாகவே இடம்பெற்ற நிலையில், மக்கள் எதிர்ப்பில் குதித்திருந்தனர்.

தமிழ் நில ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள  அமைச்சின் செயலாளர் நிஷாந்தி ஜெயசிங்க, தொல்லியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் அனுர மானதுங்க உள்ளிட்ட குழு நெடுந்தீவு பயணித்து பிக்குகளிற்கான ஓய்வு இல்லமொன்றை அமைக்க இடங்களை பார்வையிட்டதுடன்  காரை நகரிற்கும் தொல்லியல் எச்சங்களை பார்வையிட சென்றிருந்தனர்.

இந்நிலையில் மக்கள் எதிர்ப்பில் குதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments