கூட்டமைப்பின் சிவயோகன் மறைவு!வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் த.சிவயோகன் இன்று காலை வடமராட்சி கரவெட்டியில் காலமாகியுள்ளார்.

கரவெட்டி துன்னாலையை சேர்ந்த சிவயோகன் கூட்டமைப்பில் கடந்த மாகாணசபை தேர்தலில் களமிறக்கப்பட்டவராவார்.

முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை முயற்சியை ஆதரிக்க மறுத்து அடையாளப்படுத்தப்பட்ட அவர்; சுகயீனம் காரணமாக அவரது இல்லத்தில் காலமாகியுள்ளார்.

த.சிவயோகன் ஒய்வு பெற்ற ஒரு அரச அதிகாரியாவார்.


No comments