சப்பைக்கட்டு கட்டும் அரசு!கொழும்பில் இன்று திரண்ட மக்கள் கூட்டத்தால் ஆளும் தரப்பு ஆடிப்போயுள்ளது.

இதனை தடுத்து நிறுத்த பல முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதும் மக்கள் திரண்டு வந்திருந்தனர். நாட்டில் தற்போதுள்ள சூழ்நிலையில் எதிர்க்கட்சிகள் மக்களை வீதிக்கு அழைப்பது ஒரு வீரச்செயல் அல்லவெனவும் எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தாலும் தற்போதைக்கு அரசாங்கத்தை மாற்ற முடியாதெனவும் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

மக்களை வீதிக்கு அழைப்பது ஒரு வீரச் செயல் அல்ல, இது வருந்தத்தக்கது. எதிர்க்கட்சிகள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தாலும் தற்போதைக்கு அரசாங்கத்தை மாற்ற முடியாது. இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகுதான் பாராளுமன்றத்தைக் கலைக்க முடியும்.

கொவிட் சூழ்நிலையில்  பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில், மக்களைப் பாதிக்காமல் புதிய மற்றும் ஆக்கப்பூர்வமான முறையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments