நெடுங்கேணியினுள் சிங்கள குடும்பங்கள்!

வவுனியா வடக்கு - நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் அநுராதபுரத்தில் உள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவிலுள்ள ஆயிரம் குடும்பங்களை இணைப்பதற்கு முயற்சிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

இம்முயற்சி தொடர்பில் வவுனியா மாவட்டச் செயலாளர், முன்மொழிவொன்றை, எல்லை நிர்ணயக் குழுவுக்கு பரிந்துரைத்துள்ளதாக, தெரியவந்துள்ளது.

வவுனியா மாவட்டச் செயலாளர் ஊடாக அநுராதபுரத்தில் உள்ள மூன்று கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை, நெடுங்கேணி பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கான ஒரு முன்மொழிவு, எல்லை நிர்ணயக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.


No comments