டொலரில்லை:அதனால் சீனியில்லை!
இலங்கையில டொலர் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் 900 இற்கும் மேற்பட்ட கொள்கலன்களில் அத்தியாவசிய பொருட்கள் விடுவிக்கப்படாமல் ஒரு மாதத்திற்கும் மேலாக தேங்கிக் கிடப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த கொள்கலன்களில் சுமார் 10ஆயிரம் மெட்ரிக் தொன் சீனி அடங்கிய சுமார் 350 கொள்கலன்கள் இருப்பதாகவும், துறைமுகத்தில் சீனி கொள்கலன்கள் விடுவிக்கப்படாமையே நாட்டில் சீனி தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

அண்மையில் இறக்குமதியாளர்கள் நிதி அமைச்சருடன் இடம்பெற்ற சந்திப்பில் டொலரை விடுவிக்குமாறு கோரியும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

தற்போது கறுப்புச்சந்தையிலேயே சீனி விற்பனையாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது


No comments