இரகசிய முகாம்கள் இருக்கினறனவா?இறுதி யுத்த காலப்பகுதியில் கைது செய்யப்பட்டவர்கள் தொடரந்தும் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனராவென்ற சந்தேகம் வலுத்தே வருகின்றது.

 மீண்டும் மீண்டும் வன்னியில் முன்னெடுக்கப்படும்  புதைபொருள் அகழ்வு இதனை கேள்விக்குள்ளாக்கிவருகின்றது. 

இதனிடையே முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு நகர் பகுதியில்,  புதையல் தோண்ட வந்த மூவர், சந்தேகத்தின் பேரில், புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நீர்கொழும்பு, அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய  பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இவர்கள், புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் நடமாடிய நிலையில் கைதுசெய்யப்பட்டு, விசாரித்த போது, புதையல் தோண்ட வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

No comments