காணாமல் போனோர் விவகாரம்:டக்ளஸ் தொழிலில்!காணாமல் போனோர் பெயரில் மீண்டும் தனது அரசியலை ஆரம்பித்துள்ளார் டக்ளஸ் தேவானந்தா.

காணாமல் போனோரின் உறவினர்களுடனான சந்திப்பிற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கோத்தபாய கோரியிருப்பதாக டக்ளஸ் பிரச்சாரங்களை ஆரம்பித்துள்ளார்.

கடந்த சில மாதஙகளுக்கு முன்னர் சந்திப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், கொரோனா பரவல் ஏற்படுத்திய அசாதாரண நிலைமையினால் குறித்த சந்திப்பிற்கான உறவுகள் காணாமல் போனதினால் ஏற்பட்டுள்ள வாழ்வாதார பிரச்சினைகளை கவனத்திலெடுத்து அவற்றினை தீர்ப்பதற்கும், தேவையான பரிகாரங்களை வழங்குவதற்கும் தயாராக இருப்பதாக் கோத்தாபாய ராஜபக்ச, இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இத்தகைய முயற்சிகளை ஆரம்பித்த டக்ளஸ் கடுமையான எதிர்ப்பினால் பின்வாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments