தீருவிலில் மாவீரர் தினத்திற்கு அனுமதி!

சுகாதாரத்துறையின் அனுமதியுடன் நவம்பர் 27ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை, மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை தீருவில் திடலில் நடத்துவதற்கான அனுமதியை வல்வெட்டித்துறை நகரசபை எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு வழங்கியுள்ளது.

இன்று நடைபெற்ற வல்வெட்டித்துறை நகரசபையின் விசேட அமர்வினையடுத்து தீருவில் திடலில் மாவீரர் நிகழ்வை நடத்த அனுமதி வழங்கப்பட்டள்ளது.

யாழ். ஊடக அமையத்தில், கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் சுகாதாரத் துறையின் அனுமதியுடன், நவம்பர் 27ஆம் திகதி காலை 8 மணி தொடக்கம் மாலை 8 மணி வரை நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றோம்.

"குறிப்பாக, அரசியல் செயற்பாட்டாளர்களும் அரசியல் பிரதிநிதிகளும் மௌனமாக இருக்காது துணிந்து பொது இடங்களிலும் ஆலயங்களிலும் அஞ்சலியை செய்ய முன்வர வேண்டும்.

"தடை செய்யப்பட்ட நினைவேந்தல் பொருள்களை காட்சிப்படுத்தாமல் , மாவீரர்களின் நினைவேந்தல் செய்வதை யாரும் தடுக்க முடியாது. நவம்பர் 27ஆவது நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும்" எனவும் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்திருந்தார்.

எனினும் தீருவில் திடலை வழங்க கூடாதென வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளரிற்கு காவல்துறை அறிவித்திருந்தது.


இந்நிலையிலேயே இன்று அவசரமாக கூடிய சபை மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை தீருவில் திடலில் நடத்துவதற்கான அனுமதியை வல்வெட்டித்துறை நகரசபை எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு வழங்கியுள்ளது.


No comments