வடமாகாணத்திலும் பாலியல் லஞ்சம்!தென்னிலங்கை போன்று வடமாகாணசபையிலும் இடமாற்றங்களை வழங்காதிருக்க பாலியல் லஞ்சம் கோரப்படுவதான தகவல்கள் கிடைத்துள்ளன.

டொலர்களிற்காக அலையும் இன்றைய ஆட்சியாளர்கள் ஆட்சியில் அத்தகைய முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்குமென எதிர்பார்க்கவில்லை.அதிலும் பாலியல் லஞ்சம் கோரி பாதிக்கப்பட்ட பெண்களிற்கு நீதி கிடைப்பதென்பது கேள்விக்குறியே என யாழ்ப்பாணத்தில்  தெரிவித்துள்ளார் ஜக்கிய மக்கள் சக்தியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மத்தும பண்டார.

முன்னதாக உருவாக்கப்பட்ட காவல்துறை ஆணைக்குழு மற்றும்  தேர்தல் ஆணைக்குழு போன்றவற்றை கலைத்துவிடுவதில் இந்த அரசு வெற்றிபெற்றுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்களிற்கோ பெண்களிற்கோ நீதி வழங்கும் காவல்துறையும் இலங்கையில் இல்லை.பாதிக்கப்பட்ட மக்களிற்கான நீதியும் கிடைப்பதென்பது கேள்விக்குறியே எனவும் ஜக்கிய மக்கள் சக்தியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மத்தும பண்டார கேள்வியொன்றிற்கு பதிலளிக்கையில் தெரிவித்திருந்தார்.

தென்னிலங்கையில் பாலியல் இலஞ்சம் கோரி பெண்கள் பாதிக்கப்படுவது போன்று வடமாகாணசபையில் இடமாற்றங்களை செய்யாதிருக்க பாலியல் லஞ்சம் அதிகாரிகள் மட்டத்தில் கோரப்பட்டுவருவதாக கேள்வி எழுப்பப்பட்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.


No comments