கொழும்பு போராட்டத்திற்கு தடை?

 


ஐக்கிய மக்கள் சக்தியினால் எதிர்வரும் 16ம் திகதி கொழும்பில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள எதிர்ப்பு போராட்டத்தை முடக்க அரசு நகர்வுகளை முன்னெடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஏதிர்ப்பு போராட்டத்தை நடத்துவதற்கு தான் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் ஊடாக கொவிட் தொற்று மேலும் பரவுவதற்கான சாத்தியம் உள்ளமையினால், மக்கள் ஒன்று கூடுவதற்கு தன்னால் இடமளிக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜக்கிய மக்கள் சக்தி இன்றைய ஊடக சந்திப்பில் இதனை கண்டித்துள்ளது. 

நீதிமன்றத்தினால் வழங்கப்படும் உத்தரவிற்கு அமைய பொலிஸார் மூலம் போராட்டங்களை முடக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதனிடையே தமது அரசாங்கத்துடன் இணைந்து, வைரஸ் பரவலை தடுப்பதே எதிர்கட்சியின் பொறுப்பாக இருக்க வேண்டும் .

மக்கள் இவ்வாறு ஒன்று திரளும் பட்சத்தில், வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டு, புதிய வைரஸ் அலைகள் ஏற்படும் என சுகாதார பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.

சட்டவிரோதமாக மக்கள் ஒன்றுகூடுவதை நீதிமன்ற உத்தரவை பெற்று தாம் நிறுத்துவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். 

இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு முன்னின்று செயற்படுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்புடும் என அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.


 


No comments