கனடா சம்பவம்: சிறப்பான சம்பவம்:யோதிலிங்கம்!

தமிழ்தேசிய அரசியலோடு விளையாடுபவர்கள் அதைக்கேற்ற விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர்  சுமந்திரன் அவர்கள் கனடாவில் உரையாற்றியபோது அங்கே இருந்த  தமிழ் தேசிய உணர்வாளர்கள் அவரை பேச விடாமல் தடுத்து திருப்பி அனுப்பி இருக்கிறார்கள். 

சாணக்கியனும் சுமந்திரனும் அந்த கூட்டத்தில் உரை ஆற்ற இருந்த போதும் சாணக்கியன் பேசி முடிக்கும்வரை மௌனமாக இருந்த தமிழ் தேசிய உணர்வாளர்கள் சுமந்திரன் பேசும்போது பல கேள்விகளை கேட்டு அவரைத் தொடர்ந்து உரையாற்ற விடாமல்  தடுத்து திருப்பி அனுப்பியிருந்தார்கள். இது பல  வாத பிரதிவாதங்களை உருவாக்கியிருக்கிறது. சரியா? பிழையா? என்கின்ற வாதப் பிரதி  வாதங்களை உருவாக்கியிருக்கிறது.

தமிழ்  அரசியல் நிலையிலிருந்து பார்க்கின்றபோது இதைப் பற்றி நாங்கள் ஒரு வலுவான தெளிவான தெளிவை  பெற்றுக்கொள்ள முடியும்  என்று நான் நினைக்கிறேன்.

 இது 2009 க்குப் பின்னரான அரசியலின் விளைவு என்றுதான் கூற வேண்டும்.

2009க்கு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு குறிப்பாக சம்பந்தனும்,  சுமந்திரனும்,  நகர்த்தி இருந்த அரசியல் செயற்பாட்டினால் ஏற்பட்ட கூட்டுக் கோபம்தான் இந்த குழப்பத்திற்கு காரணம் என நான் நினைக்கின்றேன்.

2009க்கு பின்னர் இரண்டு பெரிய அரசியல் போக்குகள் தமிழ் மக்கள் மத்தியிலே எழுச்சி அடைந்தது.

ஒன்று இதுவரை காலமும் பின்பற்றிய தமிழ் தேசிய அரசியலை தொடர்ச்சியாக முன் கொண்டு செல்வதா,  அல்லது அந்த அரசியலை கைவிட்டுவிட்டு ஒரு சரணாகதி அரசியல் என்கின்ற  நிலைக்கு செல்வதா என்பது. சம்பந்தன் சுமந்திரன்  தலைமை அந்த சரணாகதி அரசியலிற்கு செல்கின்ற  என்கின்ற  முடிவை எடுத்திருக்கிறார்.

அந்த முடிவை எடுத்து அதற்கு ஏற்ற வகையில்  மக்களை ஒழுங்கமைக்கின்ற  ஒரு  செயற்பாட்டைத் தான் இந்த பத்து வருடமாக அவர்கள் மேற்கண்டிருக்கிறார்கள்.

ஆரம்பத்திலே அவர்கள் தமிழ் தேசிய அரசியலில் இருந்து புலி நீக்கம் செய்தார்கள். செல்வராஜா கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன் ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து அகற்றப்பட்டு அதுதான் காரணம்

இந்தியா கூறியது என்பதற்காக அவர்கள் புலி நீக்கம் செய்ய  வெளிக்கிட்டார்கள்.

 அதற்கு அடுத்த கட்டமாக தமிழ் தேசிய அரசியலில் இருந்து தமிழ்த் தேசியத்தை நீக்கம் செய்ய வெளிக்கிட்டார்கள்.

சிங்கக் கொடியினை சம்பந்தன் உயர்த்திய நிகழ்வும், அதே வேளை  சுதந்திர தின நிகழ்வில் சம்பந்தனும் சுமந்திரனும் கலந்து கொண்ட சம்பவம் நடந்திருக்கிறது.

அடுத்த கட்டமாக அவர்கள் தமிழ் தேசிய அரசியலை கைவிட்டு அரசாங்கத்துடன் எந்தவித நிபந்தனையும் இன்றி இணக்கத்திறக்கு சென்ற  விடயமாகும்.

அவர்கள் ஒரு சரணாகதி அரசியலை செய்ய வெளிக்கிட்டார்கள்.

அதன்  அடிப்படையில்தான் சம்பந்தன் அவர்கள்  எதிர்க்கட்சி தலைவர் பொறுப்பை ஏற்றது மட்டுமல்லாது   ரணில் அரசாங்கத்திற்கு முட்டுக் கொடுக்கின்ற ஒரு செயற்பாட்டையும் இவர்கள் மேற்கொண்டார்கள்.

 இவ்வாறான செயற்பாடுகளின் விளைவாகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த தேர்தலில் நியாயமான தோல்வி அடைய வேண்டிய நிலமை ஏற்பட்டிருக்கின்றது.

அடைந்த பின்னரும் கூட அவர்கள் தமிழ் தேசிய அரசியலில் இருந்து

மக்களை வழங்குகின்றன  வேலைகளை அவர்கள் தொடர்ந்தும் செய்து கொண்டு வருகிரார்கள்.

ஜெனிவாவில் கால அவகாசம் கொடுத்தது தொடக்கம் புலம்பெயர் சக்திகள் மிகவும் சிரமப்பட்டு மேற்கொண்ட செயற்றிட்டங்கள்  எல்லாவற்றையும்  அவர்கள் கீழிறக்கியிருக்கிறார்கள்.

இது எல்லாம் சேர்ந்த கூட்டு கோபம்தான் சுமந்திரனை அங்கு உரையாற்ற விடாமல் தடுத்து இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். தமிழ்தேசிய அரசியலோடு விளையாடுபவர்கள் அதைக்கேற்ற விலையைக் கொடுத்துத்தான் ஆக வேண்டும் என்பதுதான் இந்த குழப்பம் நிகழ வைத்திருக்கிறது என்பது என்னுடைய அபிப்பிராயம் என்றார்.

No comments