மீண்டும் முஸ்லீம் பூச்சாண்டி!தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் பின்னடைவையடுத்து மீண்டும் முஸ்லீம்களிற்கு எதிராக துவேசத்தை கோத்தா அரசு தூண்டிவிட்டுள்ளது.

விசாரணை பிரிவிடமிருந்த வீடியோவொன்றை இலங்கை அரசு கசியவிட்டுள்ளது.

 ஈஸ்டர் தாக்குதலை வழிநடத்திய சஹ்ரான் தலைமையிலான குழுவினர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டபோது பதிவுசெய்யப்பட்ட முழுமையான காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நிகழ்ச்சியொன்றில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இரண்டரை வருடங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது இந்த வீடியோ வெளியிடப்பட்டதன் நோக்கம் என்ன என்பது குறித்து பலர் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறான வீடியோக்கள் மற்றும் இதில் தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்து முஸ்லிம் சமூகம் அவதானமாக இருக்க வேண்டும் என முஸ்லிம் மதத் தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த வீடியோக்களில் தெரிவிக்கப்படும் கருத்துக்களைவிடுத்து, இந்த வீடியோ தற்போது ஏன் வெளியிடப்பட்டது? இதில் அரசியல் பின்னணி ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து மிக அவதானமாக செயற்பட வேண்டும் என அரசியல் அவதானியொருவர் சுட்டிக்காட்டினார்

No comments