அரச ஊழியர்கள்:மூச்,பேச்!இலங்கையில் சமூக வலைத்தளங்களின் மூலம் அரசாங்கத்தையும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதை நிறுத்துமாறு அரசாங்க ஊழியர்களுக்கு உத்தரவிடும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 

பிரதேச செயலாளர்கள், கிராம சேவகர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி அரசாங்கத்தை யும் அதன் கொள்கைகளையும் விமர்சிப்பதாக எழுந்த முறைப்பாடுகளையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வெளியிட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments