வழமை போலவே புரட்டுகின்றனர் முஸ்லீம் எம்பிகள்!



இலங்கையில் வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் கட்சியாக எடுக்கும் தீர்மானம் குறித்து ஆராய்வதற்கு நேற்று முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக கூட்டங்களை நடத்தியிருந்தன.

எனினும், இரண்டு கட்சிகளின் தலைவர்கள் கூட்டங்களில் பங்கெடுத்த போதிலும், முக்கிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளதாக கட்சித் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்போம் என்ற கட்சியின் முடிவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம் அறிவித்திருந்தார்.

அத்துடன், வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் எடுத்த தீர்மானத்தை அந்தக் கட்சியின் முக்கிய உறுப்பினர் அமீர் அலி அறிவித்தார்.

எனினும், இந்தக் கட்சிகளின் முக்கிய உறுப்பினர்கள் கூட்டத்தைப் புறக்கணித்ததால், கட்சி முடிவை ஏற்பார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அரச எதிர்ப்பு நிலைப்பாட்டை பொதுமக்கள் மத்தியில் அறிவித்து வந்தாலும். அந்தக் கட்சி உறுப்பினர்கள் 20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதேவேளை, வரவு செலவுத் திட்டத்திற்கும் ஆதரவாக வாக்களிக்கத் தயாராகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

No comments