கொல்லப்பட இருக்கும் 39 ஆயிரம் வாத்துக்கள்!


 வடக்கு ஜேர்மனியில் உள்ள மற்றொரு பண்ணையில் H5N1 பறவைக் காய்ச்சல் (Bird Flu) அதிகமாக பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஜேர்மனியின் லோயர் சாக்சோனி மாநிலத்தில் உள்ள Cloppenburgல் சுமார் 39,000 வாத்துகள் உள்ள பண்ணையில் இந்த நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில விவசாய அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த பண்ணையில் இருக்கும் அனைத்து பறவைகளும் கொல்லப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் ஜேர்மனியில் பல இடங்களில் இந்த பறவைக் காய்ச்சல் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
H5N1 பறவைக் காய்ச்சல், பெரும்பாலும் காட்டுப் பறவைகள் மூலம் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த பறவைக் காய்ச்சல் இப்போது ஐரோப்பாவில் வேகமாக பரவி வருகிறது.

இதனால் பல ஐரோப்பிய நாடுகளில் பல்லாயிரக்கணக்கான பறவைகள் அழிக்கப்படுவதற்கும், சர்வதேச வர்த்தக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வழிவகும் என்பதால், பறவை வளர்ப்பு தொழிலில் கவலையை எழுப்பியது.

போலந்தில், கிட்டத்தட்ட 650,000 பறவைகள் மந்தைகளைக் கொண்ட கோழிப் பண்ணைகளில் பறவைக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக, விலங்குகள் ஆரோக்கியத்திற்கான உலக அமைப்பு (OIE) தெரிவித்துள்ளது.

அதேபோல், பிரெஞ்சு அரசாங்கம் பறவைக் காய்ச்சலுக்கு முழு நாட்டையும் அதிக எச்சரிக்கையுடன் வைத்துள்ளது. அத்துடன் அனைத்து கோழி பண்ணைகளையும் உட்புறத்தில் வைத்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

No comments