சிறையிலுள்ள இந்திய மீனவர்களிற்கு தீபாவளி புத்தாடை!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களிற்கு தீபாவளிக்கான புத்தாடைகளை வழங்கவும், இந்திய தூதரக அதிகாரிகள் பார்வையிடுவதற்கும் இந்தியாவிலுள்ள உறவினர்களுடன் உரையாடுவதற்கும், பருத்தித்துறை நீதிமன்ற நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.

கடந்த 14ஆம் திகதி, வடக்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களும் யாழ். சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

சட்டத்தரணி ஊடாக முன்வைக்கப்பட்ட கோரிக்கையினையடுத்து இந்திய தூதரக அதிகாரிகள் மீனவர்களை பார்வையிடுவதற்கும், இந்தியாவில் உள்ள உறவினர்களுடன் தொலைபேசியில் உரையாடுவதற்கும், அவர்களுக்கான ஆடைகளை  வழங்குவதற்கும் நீதவான் அனுமதி வழங்கியுள்ளார்.


No comments