13:சி.வியும் சறுக்குகிறார்!
இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசம். வடக்கு கிழக்கு அவர்களின் மரபுவழி தாயகம். சுயநிர்ணய உரிமைக்கு அவர்கள் உரித்துடையவர்கள் என்பவை ஏற்றுக் கொள்ளப்படவேண்டும்.
இணைந்த வடக்கு கிழக்கில் உயர்ந்தபட்ச சமஸ்டி அதிகார கட்டமைப்பு ஒன்றின் கீழ் ஏற்படுத்தப்படும் அதிகார பகிர்வே தேசிய இனப்பிரச்சனைக்கான நிலையான தீர்வாகுமென தெரிவித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன். சமஸ்டி கட்டமைப்பின் கீழ் ஒரு நிலையான தீர்வினை ஏற்படுத்துவதற்கு இந்தியா எல்லாவிதமான முன்னெடுப்புக்களையும் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று யாழ்ப்பாணத்தில் 13வது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் இந்தியாவிடம் கோரிக்கை விடுக்கவென தமிழ் தேசிய கட்சிகள் பங்கெடுத்த கூட்டமொன்று இடம்பெற்றிருந்தது.
ஆயினும் கூட்டத்தில் சி.வி.விக்கினேஸ்வரன் பங்கெடுக்காத நிலையில் அவரது வரைபு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
அதே வேளை, குறுகிய அரசியல் இலாபம், தூர நோக்கற்ற சிந்தனை மற்றும் கடும் பௌத்த இனவாத சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையிலான அரசாங்கத்தின் செயற்பாடுகள் காரணமாக நாட்டில் இன்று ஏற்பட்டுள்ள ஆபத்துக்களை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள தமிழ் பேசும் மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுவதை தடுப்பதற்கும், நடவடிக்கை எடுக்கவேண்டியுள்ளது.
அரசியல் அமைப்பில் ஏற்கனவே இருக்கின்ற 13ஆவது திருத்தச் சட்டத்தை அதன் ஆரம்ப நிலையில் இருந்தவாறு முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியா காலதாமதம் எதுவும் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் கோரிக்கை விடுக்கின்றோம்.
இலங்கையில் தமிழ் பேசும் மக்களின் பாதுகாப்பு மற்றும் அரசியல் பொருளாதார மற்றும் கலாசார அபிலாi~களை உறுதிப்படுத்துவதற்கு இந்தியாவுக்கு இருக்கும் தார்மீக ரீதியான கடமையினையும் பொறுப்பினையும் நாம் வலியுறுத்துவதுடன் அதன் அடிப்படையில் உடனடியாக தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் பேசும் மக்களின் சார்பாக வேண்டுகோள் விடுக்கின்றோமெனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment