நில அபகரிப்புக்கு எதிராகப் மட்டக்களப்பில் போராட்டம்


மட்டக்களப்பு, வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காராமுனை எனும் இடத்தில் பெரும்பான்மையின மக்களைத் திட்டமிட்டு குடியேற்றும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து குறித்த இடத்துக்கு இன்று (21) விரைந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் பொதுமக்களும், தமது கண்டனத்தைத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது “காராமுனை எமது பிரதேசம்”, “இது மட்டக்களப்பு மண்” மற்றும் “எமது நிலம் எமக்கு வேண்டும்” உள்ளிட்ட பல வாசகங்களை எழுப்பியவாறு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர மேயர் தி.சரவணபவன், மற்றும் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்கள், தமிழ், மற்றும் முஸ்லிம் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டிருந்தனர்.

No comments