லொஹான் ரத்வத்த:சட்டமா அதிபரின் ஆலோசனைஅனுராதபுரம் சிறைச்சாலையில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய சம்பவத்தில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் செயற்பாடு தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, சட்டமா அதிபரின் ஆலோசனையில் கீழ் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செப்டம்பர் 15 ஆம் திகதி, கைதிகளை முழந்தாழிட செய்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்தியதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சிறை நிர்வாகம் மற்றும் கைதிகளின் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments