மாணவர்கள் வீட்டில்:ஆசிரியர்கள் றோட்டில்!


இரு வருடங்களாக மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். ஆசிரியர்கள் வீதியில் இருக்கின்றனர். இதுதான் இந்த ராஜபக்ச அரசின் பெரும் சாதனையும் நாட்டின் பெரும் வேதனையும்.”– இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்தது.

பாராளுமன்றத்தில் நேற்று விசேட கூற்றொன்றை முன்வைத்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. துஷார இந்துனில், இன்று (நேற்று) ஆசிரியர் தினம். ஆனால், ஆசிரியர்கள் வீதியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும். எனவே, ஆசிரியர்களின் போராட்டம் தொடர்பில் பாராளுமன்றம் கவனம் செலுத்த வேண்டும்” – என்றார்.

இதையடுத்து எழுந்த ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி. ரஞ்சித் மத்தும பண்டார,

“கடந்த இரு வருடங்களாக மாணவர்கள் வீட்டில் இருக்கின்றனர். ஆசிரியர்கள் வீதியில் இருக்கின்றனர். இரு தரப்பினரின் பிரச்சினைகளுக்கும் இந்த அரசிடம் தீர்வில்லை. இதுதான் இந்த ராஜபக்ச அரசின் பெரும் சாதனையும் நாட்டின் பெரும் வேதனையும்.

மாணவர்களின் எதிர்கால வீணடிக்கப்படுகின்றது. எனவே, இது தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” – என்றார்.

No comments