நடேசனின் பங்காளிகள் யார்:பரபரப்பு!


இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையம் ‘பண்டோரா பேப்பர்களில்’ பெயரிடப்பட்ட இலங்கையர்களை விசாரிக்க ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்துள்ளதாக இலங்கை அரசு பிரச்சாரங்களை முடுக்கிவிட நடேசனின் சகபாடிகள் தொடர்பில் பரபரப்பு தொற்றியுள்ளது.

ஊழல் பற்றி விசாரிக்க இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தரவின் பேரில் விசேட விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

‘பண்டோரா பேப்பர்ஸ்’ இல் குறிப்பிடப்பட்டுள்ள இலங்கையர்கள் மீது உடனடியாக விசாரணை நடத்தவும், ஒரு மாதத்திற்குள் விசாரணை குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவும் இலஞ்ச ஒழிப்பு ஆணையகத்திற்கு இலங்கை ஜனாதிபதி நேற்று உத்தரவிட்டதாக செய்திகள் கசியவிடப்பட்டுள்ளது.

எனினும் பஸில்,கோத்தா பினாமியே நடேசன் என சிங்கள ஊடகங்களும் இல்லையில்லை தமிழ் பங்காளிகளது பணமேயென தமிழ் தரப்புக்களும் பரபரப்பினை ஏற்படுத்திவருகின்றன.

இந்நிலையில் நேர்மையான விசாரணை சாத்தியமாவென கேள்வி எழுந்துள்ளது.


No comments