பிளந்தது தமிழரசு இரண்டாக?

தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராசாவோ அவரது ஆதரவாளர்களோ நேற்று மற்றும் இன்று இடம்பெற்ற போராட்டங்களில் பங்கெடுத்திருக்காமை  தமிழரசு ஆதரவாளர்களிடையே குழப்பத்தை ஏற்படடுத்தியுள்ளது.

மீனவர்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு கோரி நேற்று ஞாயிற்றுக்கிழமை முல்லைதீவிலிருந்து பருத்தித்துறை வரை கடல்வழி  பயணித்த தமிழரசுக்கட்சியின் ஒருபிரிவினர் இன்று விவசாயிகளின் தற்காலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கோரி கமநல சேவை அலுவலகங்கள் முன்னதாக குந்தியிருந்தனர்.

எனினும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் இரா.சாணக்கியன் மட்டக்களப்பிலும்  எம்.ஏ.சுமந்திரன் யாழிலுமாக இன்றைய தினம் அரசின் கமநல சேவை நிலையங்கள் முன்பாக விவசாயிகளிற்கு உரம் வேண்டி கவனயீர்ப்புப் போராட்டத்தில் பங்கெடுத்திருந்தனர்.

இதனிடையே இலங்கை முழுவதுமாக அரசிற்கெதிராக விவசாயிகள் போராட்டங்களை முன்னெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது. 


No comments